business

img

சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை.... வரிகளைக் குறைத்தால் மட்டுமே பெட்ரோல் விலை குறையும்...

புதுதில்லி:
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களைப் பொறுத்தே இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பது ஒன்றிய அரசின் வாதமாக உள்ளது. விலை நிர்ணயத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமும் இல்லை எனவும் அது கூறி வருகிறது. 

ஆனால், தேர்தல் நடக்கும் காலங்களில் மட்டும், சர்வதேச சந்தையில்விலை உயர்ந்தாலும், இந்தியாவில் மட்டும் பெட்ரோல் - டீசல் விலைகள் உயராது என்பதும், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வழக்கம்போல விலைகள் உயர்ந்து விடும் என்பதும் இந்தியர்கள் அறிந்த ஒன்றுதான். கடந்த மார்ச் மாதம் அசாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் 3 மாதங்களுக்கு பெட்ரோல் - டீசல் உயரவே இல்லை. ஒருமுறை விலைகுறைப்பு அதிசயமும் நடந்தது. 

ஆனால், மே 2-இல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மே 4-ஆம் தேதி துவங்கி ஒருமாத காலத்திற்குள் 25 முறை பெட்ரோல் - டீசல்விலைகள் உயர்ந்து விட்டன. தற்போது மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களிலும், லடாக் யூனியன் பிரதேசத்திலும் பெட்ரோல் விலை ரூபாயைத் தாண்டிவிட்டது. இங்கெல்லாம் ஒரு லிட்டர் பெட்ரோல்அதிகபட்சமாக 108 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ராஜஸ்தான் ஸ்ரீகங்கா நகரில் டீசல் விலையும் 
100 ரூபாயைத் தாண்டி விற்பனை யாகிக் கொண்டிருக்கிறது.

இடதுசாரிகள், காங்கிரஸ் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தியும், பெட்ரோல் - டீசல் விலைகளை மோடி அரசு குறைப்பதாக இல்லை. இந்நிலையில்தான், சர்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில், இந்தியாவில் வரிகளைக் குறைக்காதவரை, பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.2020-ஆம் ஆண்டின் துவக்கத்தில், கொரோனா தொற்றுப் பாதிப்பையொட்டி, உலகம் நாடுகள் பலவும் பொதுமுடக்கத்தை அறிவித்த நேரத்தில், கச்சா எண்ணெய்த் தேவை பெரிய அளவில் குறைந்தது.

விலையும் அப்போது கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதையடுத்து, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஓபெக்’ (OPEC) எண்ணெய் வள நாடுகள் தங்களின் உற்பத்தியைக் குறைத்தன. பொதுமுடக்கம் முடிவுக்கு வந்த பின்னரும்அவர்கள் உற்பத்தியை அதிகரிப்ப தாக இல்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளில் தற்போது கச்சா எண்ணெய்க்கான தேவை மிகப்பெரிய அளவிற்கு உயர்ந்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில்பெட்ரோல், டீசல் விற்பனை அதிகமானதன் மூலம் இந்தியாவிலும் கச்சா எண்ணெய்க்கான தேவை கூடியுள்ளது.எனினும்,  ஓபெக் நாடுகள் உற்பத்தியை அதிகரிக்காததால், சர்வதேச சந்தையில் கடந்த ஓராண்டில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 33 டாலர்- அதாவது, 85 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள் ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்வதால், அதிக விலை கொடுத்தே கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டிய நிலை உள்ளது. எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டாலர் மூலமே மேற்கொள்ளப்படுகிறது என்பதால், அது இந்தியாவின் டாலர் இருப்பை கரைத்து, ரூபாய் மதிப்பையும் கணிசமாக குறைத்து வருகின்றது. இதுஇந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, அனைத்து நாடுகளுமே எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் என்றாலும், இந்தியாவைப்பொறுத்தவரை இந்திய ஆட்சியா ளர்கள் விதிக்கும் அதிகபட்ச வரிதான், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்பது வேதனையான ஒன்றாகும்.

இந்தியாவில் சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டில்  36 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர்ஒன்றுக்கு 216 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோலத்தான் பெட்ரோல் - டீசல் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.பெட்ரோல் விலையில், 57 முதல்60 சதவிகிதமும், டீசல் விலையில் 51முதல் 55 சதவிகிதமும் வரியாகப் போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் என்றால்- இதில் பெட்ரோலின் உண்மையான விலை 40 ரூபாய்தான். மீதியுள்ள 60 ரூபாய் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரியாக உள்ளது.

எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் தற்போதைய சூழலில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு வரிகளைக் குறைத்தால் மட்டுமே இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை குறையும் என்ற நிலை உள்ளது. ‘ஒபெக்’ நாடுகள் தங்களின்உற்பத்தியை அதிகரித்து, அதன்மூலம் சர்வதேசச் சந்தையில் விலைக் குறைப்புக்கு வழிவகுத்தாலும் கூட, அதன்பலன்களை மோடி அரசு மக்களுக்கு கிடைக்கச்செய்யாது என்பதுதான் கடந்தகாலஅனுபவம். கூடுதல் வரிகளைத்தான்அது விதிக்கும். எனவே, வரிக் குறைப்பு மட்டுமே பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

;